#JustNow: 4,880 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை, 938 பேருக்கு கிரயப்பத்திரங்களை வழங்கினார் முதல்வர்!

Default Image

வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட  அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்.

தமிழகத்தில் வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட 2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முழுவதும் ரூ.270.15 கோடி மதிப்பில் 9 இடங்களில் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொளி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, 4,880 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையும், 938 பேருக்கு கிரயப்பத்திரங்களையும் முதலமைச்சர் வழங்கினார். தாமாக வீடுகட்டும் திட்டத்தின்கீழ் ரூ.500 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை 23,826 பயனாளிகளுக்கு வழங்குகிறார். இதனிடையே, காவல்துறை மானியக் கோரிக்கையில் காவல்துறைக்கு, புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், சென்னை காவல்துறைக்கு  கூடுதல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்