இரத்த அழுத்த பாதிப்பு உள்ளதா? இதை மட்டும் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்..!

Default Image

இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் இந்த வீட்டு குறிப்பை மட்டும் பயன்படுத்தி பாருங்கள். 

தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள் மற்றும் நமது வாழ்க்கை முறை. இதில் அதிகமான மக்கள் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு கருப்பு மிளகு மிகுந்த நற்பலன்களையும், தீர்வுகளையும் கொண்டுள்ளது. இதை நாம் எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் அதற்கு ஆயுர்வேத முறையில் கருப்பு மிளகு நல்லமுறையில் பலனளிக்கும்.

அதற்கு முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். மேலும் 2 கருமிளகை அரைத்து 1 டம்ளர் தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம். கருப்பு மிளகில் காணப்படும் பைபரைன் ஒரு மருந்தாக உடலில் செயல்படும். கருப்பு மிளகு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது உங்கள் இதயத்திற்கும் நன்மை அளிக்கும்.

கருப்பு மிளகு சாப்பிடுவதன் மூலம் இதயம் தொடர்பான பாதிப்புகளும் குறையும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. கருப்பு மிளகு மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது வயிறு சார்ந்த பிரச்சனைகள் அல்லது அமிலத்தன்மை பாதிப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட உதவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்