வீட்டின் பீரோல் இந்த பக்கம் இருந்தால் பணம் தண்ணி போல செலவாகும்..!
வீட்டு பீரோவில் பணம் தங்க அதனை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் வீடு கட்டும் பொழுது வாஸ்து படி வாசல், பூஜை அறை, சமையல் அறை, படுக்கை அறை, என ஒவ்வொன்றும் எந்த பக்கம் இருக்க வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து அதன்படி அமைக்கின்றனர். இதனால் அவர்கள் நினைத்தது போல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அந்த வீட்டில் கழிகிறது. எல்லோரும் இதேபோன்று கட்டியிருப்பார்களா என்று நமக்கு தெரியாது, ஆனால் ஒருசிலர் வீடுகளில் பணம் தங்கவே தங்காமல் இருக்கும். வேலை செய்து ஈட்டிய பணத்தை பீரோவில் வைத்த ஒரு சில நேரங்களிலேயே செலவாகி விடுகிறது என்றால் நீங்கள் பீரோல் வைத்திருக்கும் திசை சரியானதா என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
உங்கள் வீட்டு பீரோல் வடமேற்கில் இருந்தால் வீட்டில் செலவுகளும் அதிகரிக்கும், கடன் வாங்கும் சூழ்நிலையும் வரும். அதேபோல் தென்கிழக்கில் பீரோ இருந்தால் வீண் விரயங்களும், செலவுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த திசைகளில் பீரோல் வைத்திருக்கிறீர்கள் என்றால் எந்த திசைக்கு பீரோல் மாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் பீரோல் தென்மேற்கு திசையை பார்த்தவாறு இருந்தால் வைக்கும் பணம் இரட்டிப்பாக அதிகரிக்கும். பீரோவின் பின்புறம் தெற்கு திசை நோக்கியும் முன்புறம் வடக்கு திசை நோக்கியும் அமையுமாறு இருக்க வேண்டும்.
மேலும், தொழில் வருமானம் பெருக நீங்கள் உங்கள் வீட்டு பணப்பெட்டியை அல்லது பீரோலை குபேரருக்கு உகந்த திசையான மேற்கு திசை நோக்கி வைக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் வைத்திருக்கும் பீரோல் சுவரோடு ஒட்டியிருக்குமாறு அமைய கூடாது. சுவருக்கும் பீரோலுக்கு இடையே சிறிய இடைவெளி நிச்சயம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் வாயு பகவான் உங்கள் பீரோலை சுற்றி வர இயலும். இது போன்று இருந்தால் உங்கள் வீட்டில் எப்போதும் பணம் தங்கும். மேலும் நீங்கள் வைத்திருக்கும் பீரோவில் பணம் நிறைந்து கொண்டே இருக்கும்.