நெல்லையில் பரபரப்பு : குடும்பத்துடன் தீக்குழிப்பு : கலெக்ட்டர் அலுவலகம் முன்
நெல்லை மாவட்டம் தென்காசியருகே காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி இசக்கிமுத்து இவர் மனைவி சுப்புலெட்சுமி மற்றும் மகள்கள் சாருன்யா, பரணிகா ஆகியோர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
இதனை விசாரிக்கையில் இசக்கிமுத்து மனைவி சுப்புலட்சுமி ஒரு கந்துவட்டிகாரரிடம் ருபாய் 1,5,000 கடனாக வாங்கியுள்ளார். இதனை மாதம் தோறும் தவணை முறையில் ருபாய் 2,30,000-ஆக அடைத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த கந்து வட்டி கும்பல் இதுவரை வட்டி மட்டுமே அடைத்ததாகவும் அசல் அப்படியே உள்ளதாகவும் ஆதலால் அசலை திரும்ப செலுத்துமாறு வற்ப்புறித்தியுள்ளனர்.
இதனை பல முறை தெரிவித்தும் காவல் துறை நடவைக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
ஆதலால் வெறுத்துப்போன குடும்பத்தார் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் இன்று அலுவலகத்தின் முன் தங்கள் உடம்பில் மண்ணெண்ணைய் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்