#WorldEnvironmentDay:”உலகளாவிய லைஃப் இயக்கம்” – இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Default Image

‘லைஃப் இயக்கம்’ என்ற உலகளாவிய முயற்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.அதன்படி,இன்று உலக சுற்றுச்சூழல் தினமாகும்.இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘சுற்றுச்சூழலுக்கான உலகளாவிய வாழ்க்கை முறை இயக்கம்’ என்ற உலகளாவிய முயற்சியைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

இது தொடர்பாக,பிரதமர் ஏற்கனவே கூறுகையில்:”ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் குறிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு,மாலை 6 மணிக்கு,’உலகளாவிய லைஃப் இயக்கம்’ தொடங்கப்படும்.இந்த இயக்கம் மேலும் நிலையான வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சிக்கான நடைமுறைகளை ஊக்குவிக்க முயல்கிறது”,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,பிரதமர் அலுவலகம் கூறுகையில்: “உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள்,சமூகங்கள் மற்றும் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் நோக்கில் கல்வியாளர்கள்,பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அழைக்கும் வகையில், “சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கம்” தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தில் பில் கேட்ஸ்,பில் & மெலிண்டா கேட்ஸ் காலநிலை பொருளாதார நிபுணர் லார்ட் நிக்கோலஸ் ஸ்டெர்ன்,நட்ஜ் தியரி ஆசிரியர் காஸ் சன்ஸ்டீன்,உலக வள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர் அனிருத்தா தாஸ்குப்தா,யுஎன்இபி குளோபல் ஹெட் இங்கர் ஆண்டர்சன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்