அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. 3 பேர் மீது குண்டாஸ் – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
பிற மாநிலம் உள்பட பல்வேறு இடங்களில் போலி ஷிப்பிங் நிறுவன மோசடி பெரிய அளவில் நடந்துள்ளது என சென்னை காவல் ஆணையர் குற்றசாட்டு.
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி செய்த 3 பேர் மீது குண்டாஸ் சட்டம் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.
ஏஐசிடிஇ பெயரில் போலி நேர்முக தேர்வு நடத்தி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். பிற மாநிலம் உள்பட பல்வேறு இடங்களில் போலி ஷிப்பிங் நிறுவன மோசடி பெரிய அளவில் நடந்துள்ளது. சென்னை காவல்துறையினர் சுதந்திரமாக பணியாற்றுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு காவல் ஆணையர் பதில் அளித்தார்.
காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டுள்ளன, அவர்களலால் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்திருந்தார்.