தனிநபர் ஒருவர் தான் விருப்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மதம் மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு என கட்டாய மதமாற்ற புகார் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து.
தனிநபர் ஒருவர் தான் விருப்பிய மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவர் தான் விரும்பும் மதத்துக்கு மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு என்றும் மதம் மாறுவது எந்த சட்டத்தின்படியும் தடை செய்யப்படவில்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது தொடர்பான புகாரை விசாரிக்க போதிய ஆதாரம் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
சமூக ஊடகங்கள், வாட்ஸ் அப்பில் வரும் தகவலை ஆதாரமாக கொண்டு கட்டாய மதமாற்ற புகாரை விசாரிக்க மூடியதும் எனவும் விளக்கமளித்தனர். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கச்தேவா, துஷா ராவ் கெடலா அமர்வு விளக்கமளித்து. மேலும், கட்டாய மதமாற்ற புகார் தொடர்பாக உறுதியான தரவுகளை அளிக்குமாறு, மனுதாரர் அஸ்வின்குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கு விசாரணையில், மதமாற்றம் நடைபெற்றது தொடர்பாக புள்ளி விவரங்கள் எங்கே? மதமாற்றம் எங்கே நடந்தது? என்றும் பல்வேறு கேள்விகள் எழுப்பி நீதிபதிகள், செய்தித்தாள், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகத்தின் தகவல் அடிப்படையில் பொதுநல மனுவை தாக்கல் செய்யக்கூடாது என்றும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவதாக இருந்தால் கூட மனுவில் போதிய ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
தரவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 25 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மத மாற்ற பிரச்சனைக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.