மாநாடு படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளுமா டான்.!?

Default Image

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார்.  இந்த படம் ரசிகர்களுக்கு மதியொளி நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல்  வசூல் செய்திருந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த படம் வரும் ஜூன் 11-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் படம் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனென்றால் படம் அந்த அளவிற்கு எமோஷனலாக ரசிகர்களின் மனதை தொட்டுவிட்டது.

இதனையடுத்து, இந்த படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை உலகம் முழுவதும் 116 கோடி வசூல் செய்துள்ளதாம். இன்னும் ஒரு கோடி வசூல் செய்தால் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் வசூல் சாதனையை முறியடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் உலகம் முழுவதும் 117 கோடி வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்