அசத்தல்…எழுத்தாளர்களுக்கு ‘கனவு இல்லம்’ – ஆணைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.6.2022) தலைமைச் செயலகத்தில்,தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “கனவு இல்லத் திட்டத்தின்” கீழ்,ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில்,குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
அதன்படி,தமிழ் மொழியில் வெளியான தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகிய விருதுகளை பெற்ற .ந. செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன்,கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதன், முனைவர் இ.சுந்தரமூர்த்தி,பூமணி என்கிற பூ. மாணிக்கவாசகம், முனைவர் கு. மோகனராசு,இமையம் என்கிற வெ.அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில்,குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து,செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருதினையும்,விருதிற்கான 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி முதல்வர் சிறப்பித்தார்.
#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/5CjOSDckTY
— TN DIPR (@TNDIPRNEWS) June 3, 2022
இதனிடையே,இன்று காலை பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.வயது மூப்பு காரணமாக ஆரூர் தாஸ்(வயது 90) அவர்கள் தலைமை செயலகத்திற்கு வர இயலாத சூழலில் தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கே நேரில் சென்று விருது வழங்கி முதல்வர் கெளரவித்துள்ளார்.மேலும்,விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுதொகையும் ஆரூர் தாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @katpadidmk @mp_saminathan pic.twitter.com/jgajIaobrZ
— TN DIPR (@TNDIPRNEWS) June 3, 2022