திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர் கருணாநிதி – வைகோ
கலைஞரின் பிறந்த நாள் விழா ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், வைகோ அவர்கள் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாவுடன் இணைந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர் கருணாநிதி; கருணாநிதியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும், அவரது பிறந்த நாள் விழா ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.