முதல் முறையாக…இன்று முதல் 3 நாட்கள் மலர் கண்காட்சி- கட்டணம் இதுதான்!
சென்னையில் முதல் முறையாக இன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னையில் கலைவாணர் அரங்கில் இன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்று கூறப்படுகிறது.
சென்னையில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில்,கண்காட்சி வரும் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கண்காட்சியில் கலந்து கொள்வோர் கட்டணம் செலுத்தி பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மலர்களால் அலங்காரம் இடம்பெறும் கண்காட்சியைப் பார்க்க பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறார்களுக்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.மேலும்,மலர் கண்காட்சியை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.