#Justnow:கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி!
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
அதன்படி,கர்நாடகாவில் நேற்று(வியாழக்கிழமை) 297 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.மேலும்,அதனை இன்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தின் கொரோனா நேர்மறை விகிதம் 1.45 சதவீதமாக உயர்ந்துள்ளது.குறிப்பாக,பெங்களூரில் மட்டும் 276 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
“மூன்று அலைகளில் கொரோனா தொற்றிலிருந்து தப்பிய நான் இப்போது பாதிக்கப்பட்டுள்ளேன்.சிறிய காய்ச்சலை அடுத்து கொரோனா பரிசோதனையில் நேர்மறை இருப்பது கண்டறியப்பட்டது.எனக்கு மிதமான அறிகுறிகள் உள்ளன.மேலும் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுவேன்.நான் முழுமையாக தடுப்பூசி போட்டதற்கு நன்றி.
கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
Request anyone who has come in contact with me over the last few days, to get themselves tested.
— Dr Sudhakar K (@mla_sudhakar) June 2, 2022