கலைஞர் பிறந்த நாள்:விருது;ரூ.10 லட்சம் பரிசுத்தொகை – முதல்வர் ஸ்டாலின்!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அண்மையில் 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.இதற்காக,அரசு சார்பில் சென்னையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அந்த வகையில்,இன்று காலை 7.30 மணியளவில் கோபாலபுரத்தில் கருணாநிதி அவர்களின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தவுள்ளார்.இதனைத் தொடர்ந்து,காலை எட்டு மணிக்கு மெரினாவில் உள்ள கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை செலுத்துகிறார்.
அதன்பின்னர்,சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 16 அடி உயர கலைஞரின் சிலை வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில்,காலை 10 மணிக்கு முதல்வர் மரியாதை செலுத்துகிறார்.
விருது மற்றும் பரிசுத்தொகை:
இதனிடையே,கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, ரூ.5 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
இதுபோன்று,கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது இந்த ஆண்டு புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (90) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசுதொகையும் இன்று கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ளது.திருவாரூரை சேர்ந்த ஆரூர்தாஸ் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நீண்ட காலம் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது, கலைஞர் எழுதுகோல் விருது அறிவிப்பு#tngovt #Karunanidhi #cmmkstalin #DMK pic.twitter.com/1m3d880vO9
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) June 2, 2022