குட் நியூஸ்! இவர்களுக்கு இலவச கல்வி – சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

Default Image

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மனவர்களுக்கு இலவச கல்வி என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் http://unom.ac.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெட்ராஸ் பல்கலைக்கழகம் 2010-2011 கல்வியாண்டிலிருந்து “மெட்ராஸ் யுனிவர்சிட்டி இலவச கல்வித் திட்டதம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2021-2022 ஆம் கல்வியாண்டில் +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்தும், 2022-2023 கல்வியாண்டிற்கான கலை மற்றும் அறிவியலில் இளங்கலை (யுஜி) பட்டப்படிப்பைப் படிப்பதற்காகவும் உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேர மெட்ராஸ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், அனாதைகள், விதவைகளின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சேர விரும்பும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலவசக் கல்வித் திட்டத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய விவரங்கள் மற்றும் ஆவணங்கள் www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மெட்ராஸ் பல்கலைக்கழக இணையதளத்தில் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி பிளஸ்-டூ முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் ஆகும். முறையாக ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை கொண்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்