ஆண்டவருக்காக சிறப்பான சம்பவத்தை செய்த இசையமைப்பாளர் அனிருத்.!

Default Image

தமிழ் சினிமாவில், தற்போது தனது இசையால் கலக்கி வருபவர் அனிருத்.  ரஜினியிலிருந்து சிவகார்த்திகேயன் வரை அணைத்து டாப் நடிகர்களின் படங்களுக்கும் இசைமைத்து வருகிறார். இவர் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுவதால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில், கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தவுடன் அதிலும் பூந்து விளையாடிவிட்டார் என்றே கூறவேண்டும். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று அனிருத்தின் பின்னணி இசை மீது எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

இந்த நிலையில் நாளை விக்ரம் படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டைட்டில் சாங் தற்போது வெளியீடபட்டுள்ளது. இதில் பாடலுக்கு நடுவில் வரும் இசையில், அனிருத் சம்பவம் செய்துள்ளார். தகிட ..தக்.. திம்..தக் திம் என தெறிக்கும் இசை கொண்ட இந்த பாடல் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்