#Breaking:பாஜகவில் இணைகிறார் ஹர்திக் பட்டேல்;காங்கிரஸ் க்கு மீண்டும் ஒரு பின்னடைவு
குஜராத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் ஆட்டம் பரபரக்க தொடங்கியுள்ளது.இந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் பட்டேல் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
பாஜகவில் இணைவதற்கு முன்னதாக ஹர்திக் படேல் தனது ட்விட்டர் பதிவில், “தேசிய நலன், மாநில நலன், பொதுநலன், சமூக நலன் ஆகிய உணர்வுகளுடன் இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளேன். உன்னதமான சேவையில் சிறு சிப்பாயாக பணியாற்றுவேன். இந்தியாவின் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாட்டுக்கு” என்று பதிவிட்டுள்ளார்.
राष्ट्रहित, प्रदेशहित, जनहित एवं समाज हित की भावनाओं के साथ आज से नए अध्याय का प्रारंभ करने जा रहा हूँ। भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेन्द्र भाई मोदी जी के नेतृत्व में चल रहे राष्ट्र सेवा के भगीरथ कार्य में छोटा सा सिपाही बनकर काम करूँगा।
— Hardik Patel (@HardikPatel_) June 2, 2022
கடந்த சில மாதங்களாக குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஹர்திக் பட்டேல், குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தன்னை ஓரங்கட்ட நினைப்பதாகவும் குஜராத்தின் உண்மையான பிரச்சினைகளில் மூத்த தலைமை அக்கறையற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினார் இதனையடுத்து கடந்த மே 18 ம் தேதியன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
இதன் பின்னர் ஆம்ஆத்மி அல்லது பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜகவில் இன்று இணைய இருப்பதாக ட்விட் செய்துள்ளார்.இது காங்கிரஸ் கட்சிக்கு குஜராத்தில் நடக்க இருக்கின்ற சட்டமனற்ற தேர்தலுக்கு பெரும் பின்னைடாவாக பார்க்கப்படுகிறது.
28 வயதான படேல், 2015 ஆம் ஆண்டு தனது பட்டேல்
சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.மேலும் கடந்த காலங்களில் பாஜகவை கடுமையாக விமர்சித்தவர், தற்பொழுது புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளார் .