#Breaking:9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன் டெக்னாலஜி,டெய்லரிங் டிசைனிங் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
எனினும்,நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முடித்து 10 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் எனவும்,வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.