மீண்டும் மீண்டும் கார்த்தியுடன் மோத தயாரான சிவகார்த்திகேயன்.!
இந்த வருடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படம் வெளியாகுமென்று அறிவிப்பு வெளியானது.
ஏற்கனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கார்த்தியின் விருமன் படம் வெளியாகவுள்ள நிலையில், மற்றோரு படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், அனுதீப் இயக்கத்தில் சிவகார்திக்கேயன் நடித்து வரும் “SK20” திரைப்படமும் இந்த வருடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தான் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரே தினத்தில் கார்த்தியின் படமும் சிவகார்த்திகேயனின் படமும் வெளியாவதால் எந்த படம் அதிகமாக வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன்பு, ஹீரோ படமும், தம்பி திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.