‘Maggi Case’: என்னுடைய பொண்டாட்டிக்கு மேகி நூடுல்ஸ தவிர வேற ஒன்னும் தெரியாது உடனே டிவோர்ஸ்
இன்றைய பிஸியான சமூகத்தில் இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கை முறைகளை உணவு முதல் தூக்கம் வரை பரபரப்பாக மாற்றியமைத்துள்ள நிலையில், ர்நாடகாவில் ஒரு கணவர் தனது மனைவி மேகி நூடுல்ஸை மட்டும் மூன்று வேலையும் சமைத்து தருவதாக கூறி விவாகரத்து பெற்றுள்ளார்.
மைசூருவில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.எல்.ரகுநாத், பல்லாரியில் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். சிறிய காரணங்களுக்காக தம்பதிகள் விவாகரத்து கேட்டு வருகின்றனர்.அப்பொழுது இந்த “மேகி கேஸ்” பற்றி பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மேகி நூடுல்ஸைத் தவிர வேறு எந்த உணவையும் தயாரிக்கத் தெரியாது என்று தனது மனைவிக்குக் தெரியாது என்றும்,காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவாக நூடுல்ஸை மட்டும் சமைத்து கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.இறுதியில் இருவரும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து பெற்றதாக கூறினார்.
திருமண தகராறுகளைத் தீர்ப்பது கொஞ்சம் கடினம் என்று கூறிய ரகுநாத், தம்பதிகள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் பெரும்பாலான மறு இணைவுகள் நிகழ்கின்றன என்றார்.
“ஜோடிகளுக்கு இடையே ஒரு சமரசத்தை ஏற்படுத்தவும், அவர்களை மீண்டும் இணைக்கவும் நாங்கள் உணர்வுகளைப் பயன்படுத்துகிறோம். இது உடல் சார்ந்த பிரச்சனைகளை விட உளவியல் சார்ந்த பிரச்சனைகள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தம்பதிகள் மீண்டும் இணைந்தாலும், அவர்களது தகராறின் வடுக்கள் இருக்கும் என்றார்.