IPL Winner: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது குஜராத் டைட்டன்ஸ்
இன்று ஐபிஎல் 15வது சீசன் காண இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினை ரன் எடுக்கவிடாமல் சிறப்பாக கையாண்டனர்.இதில் ஹர்திக் பாண்டியா 17 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்களையும் ஜெய்ஸ்வால் 22 ரன்களையும் எடுத்தனர்.
குஜராத் டைட்டன்ஸ்:
அதன் பின்பு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக வென்றது.
ஹர்திக் பாண்டியா 34 ரன்களுக்கு ஜெய்ஸ்வால் இடம் ஆட்டமிழக்க சுப்மன் கில்(47) மற்றும் டேவிட் மில்லர்(32) ஆகியோர் சிறப்பாக விளையாடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த 15-வது சீசனில் முதல் முறையாக களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் வெற்றிக் கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.