கஞ்சா வேட்டையில் கைதானவர் மீண்டும் குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் – டிஜிபி சைலேந்திர பாபு
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி.
சென்னை அடுத்து ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாட்டில் கஞ்சா வழக்கில் இதுவரை 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 200 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டையில் கைதானவர் மீண்டும் குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில் அளித்தார். கள்ளச்சாராய விற்பனையும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குடிபோதையில் இருக்கும் விசாரணை கைதிகளை தாக்கும்போது லாக்கப் மரணங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. விசாரணை கைதிகளை ஆயுத பிரயோகமின்றி விசாரிக்க தேவையான பயிற்சியை போலீசாருக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.