#JobAlert: தபால் துறையில் 38,926 காலிப்பணியிடங்கள்.. ஜூன் 5 தான் கடைசி.. முந்துங்கள்!

Default Image

இந்திய தபால் துறையில் 38,926 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா போஸ்ட் Gramin Dak Sevak (GDS) 2022-ஆம் ஆண்டுக்கான தபால் துறையில் கிராம தபால் (GDS) ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் (ABPM) ஊழியர்களுக்கான 38,926 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 2 முதல் அதாவது ஏற்கனவே தொடங்கிய நிலையில், தற்போது ஜூன் 5-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.

கல்வித்தகுதி: இந்திய போஸ்ட் GDS க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், இந்திய அரசு / மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கணிதம், உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தில் (கட்டாய அல்லது விருப்பப் பாடங்களாகப் படித்து) தேர்ச்சி மதிப்பெண்களுடன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  அவர்கள் சைக்கிள் ஓட்டுதல் பற்றிய அறிவையும் பெற்றிருக்க வேண்டும், ஏனெனில் இது அனைத்து GDS பதவிகளுக்கும் முன்தேவையான நிபந்தனையாகும்.

தேர்வுமுறை: 10ஆம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படும். விண்ணப்பதாரரின் தகுதி நிலை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட பதவிகளின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தகுதிப் பட்டியலின் படி தேர்வு செய்யப்படும். இந்தியா போஸ்ட் GDS 2022க்கான தேர்வு செயல்முறை நவம்பர் 15க்குள் நிறைவடையும்.

சைக்கிள் ஓட்டுதல் பற்றிய அறிவு:  அனைத்து GDS பதவிகளுக்கும் சைக்கிள் ஓட்டுதல் பற்றிய அறிவு ஒரு தேவையான நிபந்தனையாகும். ஒரு விண்ணப்பதாரர் ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டும் அறிவு இருந்தால், அது சைக்கிள் ஓட்டும் அறிவாகக் கருதப்படலாம். இதுதொடர்பான விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது மற்றும் சம்பளம்: குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 40 வயதும் இருக்க வேண்டும். நேரம் தொடர்பான தொடர் கொடுப்பனவு (TRCA) வடிவில் ஊதியங்கள் GDS க்கு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். India Post GDS Recruitment 2022 Application Form. இந்தியா போஸ்ட் GDS ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பு: indiapostgdsonline.gov.in/Notifications. 

விண்ணப்பக் கட்டணம்: கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் வசதி/ UPI அல்லது ஏதேனும் தலைமை அஞ்சல் அலுவலகம் மூலம் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும். UR/OBC/EWS/ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பெண் விண்ணப்பதாரர்கள், SC/ST விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 05 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி என்றும் இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest