மே 25 முதல் 30-ஆம் தேதி வரை தொடர் ஆர்ப்பாட்டம் – சிபிஎம், சிபிஐ, விசிக அறிவிப்பு
மத்திய அரசை கண்டித்து மே 25 முதல் 30-ஆம் தேதி வரை தொடர்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்து வரும் நிலையில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎம், சிபிஐ, விசிக அறிவித்துள்ளது. அதன்படி, மே 25 முதல் 30-ஆம் தேதி வரை தொடர்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.