தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் இணைந்த பிரகாஷ் ராஜ்.! வைரலாகும் புகைப்படம்.!
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. இந்த படம் விஜயின் 66-வது படம் என்பதால், படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார்.
மேலும், படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், சம்யுக்தா, யோகிபாபு போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார். விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கு முன்பு இருவரும் இணைந்து நடித்திருந்த கில்லி, போக்கிரி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
Hai Chellam sssss. We are back #thalapathy66 pic.twitter.com/K2mK2TlNgi
— Prakash Raj (@prakashraaj) May 22, 2022