புதிய வகை ஓமைக்ரான் தொற்று – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 புதிய கொரோனா வகை கண்டறியப்பட்டது என தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, குணமாகிவிட்டதாகவும் கூறினார். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால், புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், புதிய வகை ஓமைக்ரான் தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டது. இப்போது அவர் நலமுடன் இருக்கிறார். புதிய வகை தொற்று பரவவே இல்லை என தெரிவித்தார். இதன்பின் பேசிய அமைச்சர், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவர்கள் குறைப்பது நாங்களா? என்று அனைத்து மாநிலங்களும் விமர்சனம் செய்து வருகிறது. இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.