#JustNow: குரூப் 2, 2ஏ தேர்வு; 1,83,285 பேர் ஆப்சென்ட் – TNPSC அறிவிப்பு

Default Image

இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என TNPSC தலைவர் தகவல்.

தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( 84.44% ) மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்றும் தேர்வுக்காக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்களில் 1,83,285 பேர் தேர்வு எழுதவில்லை எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்றது. 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் குருப் 2 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 1,83,285 பேர் தேர்வு எழுத வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்