லட்சுமி ராயுடன் குத்தாட்டம் போடும் அண்ணாச்சி.! வெளியானது “வாடிவாசல்” பாடல்.!
சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார்.
இந்த படத்தில் அன்னாச்சிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான வாடிவாசல் பாடல் இன்று வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அதன்படி, தற்போது இந்த வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பாடலில். அண்ணாச்சி லட்சுமி ராய்யுடன் குத்தாட்டம் போடுகிறார்.