பிட் பேப்பர் ஜெராக்ஸ் – 11 பேரை சஸ்பெண்ட் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிரடி நடவடிக்கை!
பிட் பேப்பர் கண்டறியப்பட்ட விவகாரத்தில் 11 தேர்வறை கண்காணிப்பாளர்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பிட் பேப்பர் கண்டறியப்பட்ட விவகாரத்தில் 11 தேர்வறை கண்காணிப்பாளர்களை (ஆசிரியர்கள்) சஸ்பெண்ட் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொதுத்தேர்வு மையங்களில் 5 கிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பிட் பேப்பர்கள் சிக்கிய தேர்வு மையங்களில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தேர்வறை கண்காணிப்பாளர்களை நியமித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிபாளையம் மையங்களில் காப்பி அடிப்பதற்காக மாணவர்கள் பிட் பேப்பர்கள் மறைத்து வைத்திருந்தனர்.
பாட புத்தகத்தை மைக்ரோ ஜெராக்ஸ் எடுத்து பிட் பேப்பர்களை தேர்வு மையங்களில் மறைத்து வைத்திருந்தனர். தேர்வு மையங்களில் மறைத்து வைக்கப்பட்டியிருந்த 5 கிலோ பிட் பேப்பர்கள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதனால் தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணியில் இருந்த 11 ஆசிரியர்களை விடுவித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.