எதெற்கெடுத்தாலும் இவ்வாறு முரண்டு பிடிக்கும் நிலை சரியானதல்ல – கே.பாலகிருஷ்ணன்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளித்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசின் அரசாணை, இன்றைய தினமே அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆரம்பத்தில் வி.ஐ.பி தரிசனம் மட்டுமே கனகசபை மீது அனுமதிக்கப்பட்டது. பின் பொதுமக்கள் அனைவரும் வழிபட்ட நிலையில், யாருக்கும் அனுமதி இல்லை என்ற முடிவை தீட்சிதர்கள் எடுத்தனர். இதற்கு எதிராக போராட்டங்களும் எழுந்தன.
இவ்விசயத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து, கனகசபை மீது ஏறி அனைவரும் வழிபடலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் தீட்சிதர்கள் இப்போதும் இந்த முடிவுக்கு ஒத்துழைக்கவில்லை. எதெற்கெடுத்தாலும் அவர்கள் இவ்வாறு முரண்டு பிடிக்கும் நிலை சரியானதல்ல.
இருப்பினும், உறுதியாக இருந்த அரசாங்கம், உத்தரவை உடனடியாக அமல் படுத்தி, மக்கள் வழிபடுவதை உறுதி செய்துள்ள நடவடிக்கையை சி.பி.ஐ(எம்) சார்பில் பாராட்டி வரவேற்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.