கைய காலாக நெனச்சி கேக்கறேன் டிக்கெட் எடுத்துருங்க.., வடிவேலு ரசிகராய் கெஞ்சும் பார்த்திபன்.!

Default Image

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே படங்களை இயக்கியும், நடித்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பார்த்திபன். இவர் இயக்கி, நடித்த, ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், தானே ஒரு படம் இயக்கி அதில் நடித்துள்ளார். இரவின் நிழல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக  100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ள படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்தப் படம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளில் நுழைந்து சாதனை படைத்துள்ளது.மேலும், கோலாகலமாக சர்வதேச அளவில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இந்த படம் திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட போஸ்டரில், “இது போன்ற முதன் முயற்சிக்கு முதல் டிக்கெட் வாங்கும் கைகளை நான் கால்களாய் நினைத்து வணங்குகிறேன்” – வடிவேலு ரசிகர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்