சூப்பர் அப்டேட்.. “ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி”!
தமிழ்நாட்டை சேர்ந்த / தமிழ் வம்சாவளியை சேர்ந்த பட்டியலினத்தவர்களால் இந்தியாவுக்குள் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதியுதவி பெற www.startuptn.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பங்குகள், பங்குதாரர்கள் என்று அனைவரும் SC/ST வகுப்பினராக இருந்தால் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.