#CUETPG:இன்று முதல்…இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – UGC முக்கிய அறிவிப்பு!
நடப்பு ஆண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கான பொதுவான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) முடிவு செய்திருந்தது.
இந்நிலையில்,முதுநிலைப் பட்டதாரி சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-PG) வருகின்ற ஜூலை 2022 கடைசி வாரத்தில் நடைபெறும் என்று பல்கலைக் கழக மானியக்குழு (UGC) தலைவர் எம் ஜகதேஷ் குமார் அறிவித்துள்ளார்.
மேலும்,இத்தேர்வுக்கு தேசிய தேர்வு மையத்தின் அதிகாரப்பூர்வ https://nta.ac.in/ இணையதள பக்கத்தில் இன்று முதல் வருகின்ற ஜூன் 18 வரை விண்ணபிக்கலாம் எனவும் யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே,இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமல்லாமல் CUET மதிப்பெண்கள் கட்டாயம் என்று UGC தலைவர் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Common University Entrance Test (CUET-PG) for post-graduate admissions to be held in the last week of July 2022. Application Form submission will start today on NTA website: UGC Chairman M Jagadesh Kumar to ANI pic.twitter.com/5swswvJGT2
— ANI (@ANI) May 19, 2022