#Shocking:புரட்டிப்போட்ட கனமழை-2 லட்சம் பேர் பாதிப்பு;வெள்ளத்தில் சிக்கிய யானை!வீடியோ உள்ளே!
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் 20 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக திமா ஹசாவோ என்ற மலை மாவட்டமானது மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே,வெள்ளத்தில் சிக்கி கச்சார் மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும்,அதே நேரத்தில் டிமா ஹசாவோ என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், 20 மாவட்டங்களில் உள்ள 652 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால்,ஏழு மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, 32,959 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள்,வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம்,பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.மேலும்,16,000 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக,குவஹாத்தியில் உள்ள வடகிழக்கு எல்லை ரயில்வே (NFR) நிலச்சரிவு மற்றும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி ரயில்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.இதனிடையே,வெள்ளத்தில் சிக்கிய யானை தண்ணீரில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
Current flood situation in #Assam #Elephant#AssamFloods pic.twitter.com/DaYCUFaXjm
— Hemanta Kumar Nath (@hemantakrnath) May 16, 2022