300 அடி ஆழம்;கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து – 6 பேரின் நிலை என்ன?..!

திருநெல்வேலி மாவட்டத்தில் பொன்னாக்குடி அருகே உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 3 ஜேசிபி ஆபரேட்டர்கள் 2 லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர் ஒருவர் என மொத்தம் 6 ஊழியர்கள் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து,300 அடி ஆழத்தில் இருந்த ஜேசிபி,லாரி மீது பாறை விழுந்து விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து,தூத்துக்குடி,திருநெல்வேலியில் இருந்து ராட்சச கிரேன்கள் கொண்டு வரப்பட்டு,அதன் உதவியுடன் லாரி,ஜேசிபி மீது விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும்,இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய மீட்புப்படையினர் வந்து கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,நேற்று மழை காரணமாக ஊழியர்கள் பலர் முன்பே குவாரியில் இருந்து வெளியேறிவிட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment