மாணவர்கள் கவனத்திற்கு…இன்றே கடைசி நாள்,இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?..!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 6 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில்,பின்னர் மே 15 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு விடுத்தது.
அதன்படி,https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,முன்னதாக நீட் தேர்வு 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற நிலையில் இனி 3 மணி 20 நிமிடங்கள் நடைபெறும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
இந்நிலையில்,நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்காக எழுதும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.நாடு முழுவதும் ஜூலை 17 ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில்,அதற்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.மேலும்,நாடு முழுவதும் இதுவரை நீட் தேர்வு எழுத 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.