#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த கொல்கத்தா!
ஐபிஎல் தொடரில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 61-வது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் வீரர்கள்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்ய ரஹானே, நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி.