நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி…!
நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாமர மக்கள் மட்டுமல்லாது உலக தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டானுக்கு அறிகுறி லேசாக இருப்பதாகவும் இதனால் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.