#JustNow: கோதுமைக்கு தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு
தொடர் விலை ஏற்றத்தை தவிர்க்கும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை.
உள்நாட்டில் தொடர் விலையேற்றத்தை தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இரண்டு மாதமாக கோதுமை விலை நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு கோதுமை தருவதை குறைத்துள்ளனர்.
கோதுமையை தனியார் நிறுவனங்கள் அதிகளவில் செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் உலக அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவி வருகிறது. எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், தடை விதிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.