இதனை செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் – ஜாக்டோ ஜியோ அமைப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென என ஜாக்டோ ஜியோ அமைப்பு கோரிக்கை.
தமிழகத்தில் தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்ட சாத்தியமற்றது என தமிழக அரசு கூறியதற்கு, அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, சமூகம் பாதுகாப்பாக கூறக்கூடிய பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காத்திருந்தனர். ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த சாத்தியமில்லை என கூறுவது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறினார்.