மன்னிப்பு கோரிய விஷாலுக்கு ஆப்பு வைத்த பிஜேபி : ஆபிசில் ரெய்டு
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனத்தை நீக்க கோரி தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பிஜேபி செய்தி தொடர்பாளர் H.ராஜா மற்றும் இதர பிஜேபி நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் எனுவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் H.ராஜா அவர்கள் மெர்சல் திரைப்படத்தை தான் இணையத்தில் பார்த்ததாக தெரிவித்தார்.
விஷால் பட நிறுவனத்தில் ரெய்டு
இதனை தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் வன்மையாக கண்டிக்கத்தக்கது மேலும் H.ராஜா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து இன்று விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ இன்று வருமான வரி அதிரடி சோதனை நடத்திவருகின்றது.
இதுக்கும் பிஜேபிக்கும் சம்பந்தமும் இல்லையாம்!!!!! அப்டிதான் சொல்லிகிறாங்க !!!!!!!!!