அண்ணன்-தங்கை உறவு என்பது இரத்தமும் சதையும் கலந்தது, காலத்தால் அழியாதது- பாரதிராஜா.!
ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் கடந்த 6-ஆம் தேதி வெளியானது.
இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த பழிவாங்கும் கதைக்களமாக இருக்கிறது.ந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா படத்தை பார்த்துவிட்டு ட்வீட்டரில் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் ட்வீட்டரில், ” மாயாண்டி – விருமாயி
சங்கையா – பொன்னி கதாபாத்திரங்கள் கதையின் களத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பு வேறுபாடாக இருக்கலாம், ஆனால் அண்ணன்-தங்கை உறவு என்பது இரத்தமும் சதையும் கலந்தது, காலத்தால் அழியாதது” என்று பதிவிட்டுள்ளார்.
மாயாண்டி – விருமாயி
சங்கையா – பொன்னி
கதாபாத்திரங்கள்
கதையின் களத்திற்கு
ஏற்றவாறு வடிவமைப்பு வேறுபாடாக
இருக்கலாம், ஆனால்
அண்ணன்-தங்கை உறவு
என்பது இரத்தமும் சதையும் கலந்தது, காலத்தால்
அழியாதது.@ArunMatheswaran@selvaraghavan @KeerthyOfficial #SaaniKaayitham pic.twitter.com/6BuH4Q4GpH— Bharathiraja (@offBharathiraja) May 10, 2022