“மிகப்பெரிய தண்டனை;பிரபாகரனின் ஆன்மா சாந்தி”- தேமுதிக தலைவர் வரவேற்பு
கடும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும்,நேற்று நடந்த வன்முறையில் 30க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.இந்த சூழலில்,நேற்று இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.இதனைத் தொடர்ந்து, இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே, இலங்கையில் வன்முறை வெடித்துள்ள நிலையில், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பியோட முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அப்பகுதியில் ஆர்பாட்டடக்கரார்கள் குவிந்து வருகின்றனர். ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட கூடாது என்றும் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில்,ஒரு இனத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து,அத்தனை மக்களையும் கொலை,கொள்ளை பலாத்காரம் செய்து மிக கொடூரமாக நடந்து கொண்ட ராஜபக்சேவிற்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும்,”இன்றைக்கு தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவருடன் இறந்த அனைத்து தமிழீழ மக்களின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்.எனவே, அந்த மக்களை இன்று நாம் நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்’,எனவும் விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒரு இனத்தை அழித்த ராஜபக்சே இன்று மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார்.#இலங்கை #ஈழத்தமிழர்கள் pic.twitter.com/kHRb9MLNtA
— Vijayakant (@iVijayakant) May 10, 2022