#Breaking:பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.அதன்படி,நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே,அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 60 பைசாக்கள் சரிந்து 77.50 ஆக உள்ள நிலையில் பிரதமர் தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.மேலும்,பொருளாதாரம் வீழ்ச்சியடைவதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டுமே தவிர தலைப்புச் செய்திகளில் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.இந்த நிலையில்,நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.