திருமண விழாவில் பவர் கட்… மாப்பிளையை மாற்றிய 2 சகோதிரிகள்!

Default Image

மத்தியப் பிரதேசத்தில் திருமண செய்யும் நேரத்தில் பவர் கட் இருந்ததால் மாப்பிளையை மாற்றி மணமுடித்த சகோதிரிகள்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பட்நகர் தெஹ்சில் அஸ்லானா என்ற கிராமத்தில் ஒரே நாளில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் திருமணம், மின்சாரம் துண்டிப்பு (POWER CUT) காரணமாக தவறான மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட வினோதமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விழாவில் ரமேஷ்லா என்பாரின் இரண்டு மகள்கள், நிகிதா மற்றும் கரிஷ்மா வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களான டங்வாரா போலா மற்றும் கணேஷ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் மணப்பெண்கள் இருவரும் முகத்தை மறைத்து இருந்ததாலும், ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்ததாலும், தவறான மாப்பிள்ளைகளை வைத்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

திருமணம் சமயத்தில் பவர் கேட் என்பதால் இருட்டில், மணப்பெண்களை தவறான மாப்பிள்ளையுடன் திருமண விழாவை நடத்தி உள்ளனர். திருமண பண்டிதர் மாப்பிள்ளைகளை ‘மாற்றிய’ மணப்பெண்களுடன் சுற்றும்படி செய்துள்ளார். மணமகன்கள், மணமக்களை அந்தந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிறகு தான் இதுவே தெரியவந்துள்ளது. சிறிது நேர பிரச்சனைக்கு பிறகு குடும்பங்கள் சமரசம் செய்து கொண்டதாக தகவல் கூறப்படுகிறது.

மணமக்கள் மற்றும் மணமகன்கள் மறுநாள் தங்கள் சரியான துணையுடன் சடங்குகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வினோதமான சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இது இந்தியாவில் மட்டுமே நடக்கும் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்