#IPL2022: வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா.. இன்று மும்பை அணியுடன் மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 56-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதியை கடந்துள்ள நிலையில், தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 56-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை அணி 22 முறையும், கொல்கத்தா அணி 8 முறை வெற்றி பெற்றுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி 10 போட்டிகளில் விளையாடியது. அதில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கின்றது.
மேலும், பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை இழந்தது. மேலும் கொல்கத்தா அணி, 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 9-ம் இடத்தில் உள்ளது. தற்பொழுது கொல்கத்தா அணி, இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய நிலையில் இருப்பதால், இன்றைய போட்டி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் XI:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஆரோன் ஃபிஞ்ச், அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், அமன் கான்/அனுகுல் ராய், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ்/ஹர்ஷித் ராணா, சிவம் மாவி
மும்பை இந்தியன்ஸ்:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ஷர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், குமார் கார்த்திகேயா / பாசில் தம்பி, ஜஸ்பிரிட் பும்ரா, ரிலே மெரிடித்.