அதிர்ச்சி : புரோட்டா பார்சலில் பாம்பு தோல்…! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!

Default Image

திருவனந்தபுரத்திலுள்ள நெடுமங்காடு நகராட்சி பகுதிக்குட்பட்ட ஒரு தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா  உணவுப் பொட்டலத்தில் பாம்பின் தோல் இருந்ததாக கண்டுபிடித்ததாக புகார்.

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள நெடுமங்காடு நகராட்சி பகுதிக்குட்பட்ட ஒரு தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா  உணவுப் பொட்டலத்தில் பாம்பின் தோல் இருந்ததாக கண்டுபிடித்ததாக புகார் எழுந்துள்ளது.  இதனையடுத்து அந்த ஹோட்டல் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.

 இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி அர்ஷிதா பஷீர் கூறுகையில் சமயலறையில் போதிய வெளிச்சம் இல்லை மற்றும் குப்பைகள் வெளியில் கொட்டப்பட்டிருந்தன. இதனால் ஹோட்டலை மூட உத்தரவிட்டு உள்ளோம். இந்த மோசமான சூழலில் ஹோட்டலை நடத்தி இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மீதமுள்ள உணவுகள் ஆய்விற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த அறிக்கையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்