பரபரப்பு…பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் கைது!
பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் காவல்துறை அதன் சைபர்செல்லில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BJP leader Tajinder Pal Singh Bagga arrested by Punjab Police: Aam Aadmi Party MLA Naresh Balyan pic.twitter.com/ibrebvNCeU
— ANI (@ANI) May 6, 2022
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) தேசிய செயலாளர் தேஜிந்தர் பால் சிங் பக்கா ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும், வதந்திகளை பரப்பியதாகவும்,மத மற்றும் வகுப்புவாத கலவரத்தை உருவாக்க முயற்சித்ததாகவும்,ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சன்னி சிங் புகார் அளித்ததை அடுத்து பாஜக தலைவர் தேஜிந்தர் பால் சிங் சிக்கா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும்,புகார்தாரர்,தேஜிந்தர் பால் மீதான வீடியோ கிளிப் ஆதாரங்களை போலீஸிடம் சமர்ப்பித்துள்ளார்.இதனிடையே,மார்ச் 30 அன்று நடந்த போராட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தேஜிந்தர் பால் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து,தேஜிந்தர் பால் சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.அந்த வகையில், டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,அரசியல் எதிரிகளை மிரட்டுவதற்காக பஞ்சாபில் தனது கட்சியின் அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளது மிகவும் வெட்கக்கேடானது. இந்த நெருக்கடியான நேரத்தில் டெல்லியின் ஒவ்வொரு குடிமகனும் தேஜேந்திர பால் சிங் பக்காவின் குடும்பத்துடன் நிற்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.