“ஆண்கள் – பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை” – அமைச்சர் பொன்முடி

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி- பதில் நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக உள்ளன. 2022-2023-ஆம் கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், பெண்களுக்கென தனி கல்லூரி உருவாக்குவதை விட, ஆண்கள், பெண்கள் இருவரும் சேர்ந்து படிப்பதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில் புதிய பொறியியல் கல்லூரி தொடங்க வாய்ப்பில்லை என மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் தங்கள் தொகுதியில் பொறியியல் கல்லூரி தொடங்கப்படுமா என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025