#IPL2022: கூட்டணி போட்டு காட்டடி அடித்த பவல் – வார்னர்.. ஹைதராபாத் அணிக்கு 208 ரன்கள் இலக்கு!
இன்றைய போட்டியில் பவல், வார்னர் கூட்டணி போட்டு அதிரடியாக ஆடினார்கள். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 50-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங் வரிசையில் மாற்றங்களுடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தீப் சிங் – வார்னர் களமிறங்கினார்கள்.
தொடக்கத்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் மந்தீப் சிங் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ், 10 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் இருந்த டேவிட் வார்னர், அதிரடியாக ஆடத் தொடங்கினார். பின்னர் ரிஷப் பண்ட் களமிறங்கி சிறப்பாக ஆடி 26 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய பவல், வார்னருடன் இணைந்து அதிரடியாக ஆடி வந்தார்கள்.
இவர்களின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் 200-ஐ கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. இதில் அதிகபட்சமாக வார்னர் 92 ரன்களும், பவல் 67 ரன்கள் அடித்து அசத்தினார்கள்.