பரபரப்பு…புதிய இயக்கத்தை தொடங்கும் பிரசாந்த் கிஷோர்!

Default Image

கடந்த 2014 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக முதல் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வரை பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரின் வியூகம் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சந்திப்பு:

அந்த வகையில்,சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து,கட்சியை மேம்படுத்துவது தொடர்பான தனது பரிந்துரைகளை அளித்திருந்ததாகவும்,காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுத்த நிலையில்,அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

புதிய அரசியல் கட்சி:

இந்த சூழலில்,அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.அதில், ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும்,மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது ஆலோசனையானது 10 ஆண்டுகள் ரோலர்கோஸ்டர் சவாரிக்கு (பிரதமர் மோடி தலைமையிலான அரசு) வழிவகுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே,மக்கள் நல்லாட்சிக்கான பாதைக்கு செல்ல வேண்டிய நேரம் இது. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன் என சூசகமாக தெரிவித்திருந்தார்.இதனால் பீகார் மாநிலத்தை மையமாக வைத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகினது.

இந்நிலையில்,’ஜன் ஸ்வராஜ்’ இயக்கத்தை தொடங்கவுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.மேலும், முதற்கட்டமாக,அக்டோபர் 2 முதல் பீகாரில் மேற்கு சம்பாரனில் உள்ள காந்தி ஆசிரமத்தில் இருந்து 3000 கி.மீ. நடைபெயணம் சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனால்,புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவர் எந்த தகவலும் அளிக்கவில்லை.இருப்பினும்,தேவைப்பட்டால், ஆகஸ்ட்-செப்டம்பர் வரை மக்களைச் சந்தித்து அரசியல் கட்சியின் வடிவம் தீர்மானிக்கப்படும் என்றும்,பீகாரில் என்னை அரசியல் ஆர்வலராகப் பார்ப்பீர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்து வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆயத்தமாகி வரும் சூழலில்,பிரசாந்த் கிஷோரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்